tamilnadu

img

நிறுத்தப்பட்ட பணிகளை துவக்குக: மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்....

சென்னை:
கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, மாவட்டங்களில் நிறுத் தப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை அதிகாரிகள் துவக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் சூம் செயலி வழியாக காணொலி காட்சி மூலம் அக்-26 அன்று மாநில தலைவர் பா. ஜான்ஸிராணி தலைமையில் நடைபெற்றது.  ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளீதரன் மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து துவக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் வருமாறு:

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள சான்று வழங்குவது உள்ளிட்ட நலத்திட்டப்பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பெரும்பாலான மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. தற்போது அரசு அலுவலகங்கள் முழுமையாக திறக்கப் பட்டு 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையிலும், இப்பணிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இன்னும் துவக்கவில்லை.  இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் பாதிப்புக்குள் ளாகி உள்ளனர்.எனவே, அடையாள சான்று, பேருந்து, ரயில் பயண சான்று உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை மீண்டும் துவக்கி நடத்திட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரியஉத்தரவுகளை தமிழக முதலமைச்சர் பிறப்பிக்க தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்திக் கோருகிறது.

மாவட்ட நல அலுவலர்கள்
புதிதாக உருவாக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. உரிய கட்டமைப்புடன் மாவட்ட நல அலுவலகங்களும் இல்லை.  மேலும், ஒரு சில மாவட் டங்களில் மாவட்ட நல அலுவலர்கள் இல்லாததால், அருகாமை மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதாவது வருவதால் அப்படிப்பட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை நியமிக்கவும், உரிய கட்டமைப்புடன்கூடிய மாவட்ட நல அலுவலகங்களை விரைவில் உருவாக்கி இயக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரை எமது சங்கம் வலியுறுத்துகிறது.

;