tamilnadu

img

சென்னையை போன்று பிறமாவட்டங்களிலும் தடுப்புப் பணி: அமைச்சர் வேலுமணி

சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு பணிகளை பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் பணியில் 12 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம் கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சி முழுவதும் 17 ஆயிரத்து 134 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் 10 லட்சத்து 65 ஆயிரத்து 981 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 12 ஆயிரத்து 237 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் தொற்று எண் ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையைப் போன்று பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை  மேற்கொண்டு, கொரோனாவை முற்றிலும் கட்டுப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

;