tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் மூத்த தலைவர் கே.ராமசாமி காலமானார்

சென்னை:
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மூத்த தலைவர் கே.ராமசாமி காலமானார். 

அவரது மறைவு குறித்து அமைப்பின் பொதுச்செயலாளர்  எஸ். இராஜேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

கோவை மாவட்டத்தின் காடம்பாறை நீர் மின் உற்பத்தி திட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த போராடி வெற்றி கண்டு, தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்வெளிச்சத்தை காட்டிய அருமை தோழர் கே.ஆர் என்று அழைக்கப்படும் கே. ராமசாமி ஆகஸ்ட் 22 அன்று இரவு 10.30மணியளவில் மதுரையில் காலமானார்.1967  ஆண்டில் கோவை மாவட்டம் ஆழியாறு அணைக்கட்டுப் பகுதி தொழிலாளர்கள் தினக்கூலியாக பணிபுரிந்த காலத்தில் தங்கள் உரிமைக்காகபோராட்டம் நடத்திட அணைக்கட்டு தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்து நடத்திவந்தனர்.1963 இல் இருந்து துவங்கப்பட்ட கீழ் மற்றும் மேல் ஆழியார் அணை கட்டுமான பணிகள் பாதியளவு நிறைவேறியநிலையில் 450 பேரை வேலை நீக்கம்செய்வதாக நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அறிவித்து வெளியேற்றியது.இந்தப் போராட்டத்தில் அணைக்கட்டு தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்அக்காமலை ராமசாமி போராட்டத்தை கண்டு கொள்ளாத நிலையில் தோழர் துளசிதாஸ் உடன் கே. ராமசாமியும் இணைந்து போராடி கே.ரமணி எம்பியை தலைவராகவும் வி. துளசிதாசை செயலாளராகவும் தேர்வு செய்தனர் .இதனைப் பொறுக்க முடியாத அக்காமலை ராமசாமியின் அடியாட்கள்தோழர் ராமசாமியின்  வீட்டிற்குள் நுழைந்து ராமசாமி, அவரது மனைவி, குழந்தைகள் என அனைவர் மீதும் சைக்கிள் செயினால்  தாக்குதல் நடத்தி சித்ரவதை செய்தனர்.

தோழர் கே.ராமசாமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலநாட்கள் சிகிச்சைக்கு பின்பு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதில் தோழர் இராமசாமியின் பங்கும் உள்ளது.காடம்பாறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த 102 நாட்கள் உண்ணாவிரத போராட்டம்  நடத்தினர். 400க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். தோழர் கே. ராமசாமி  தொழிலாளர்களுடன் கைதாகி ஆறுமாதம் கோவை சிறையில் அடைக்கப் பட்டார். கடுமையான தாக்குதலுக்கும் வியாதிக்கும் உள்ளாகி கடைசி ஆளாக சிறையிலிருந்து வெளிவந்தார் தோழர் கே ஆர்..வால்பாறை பகுதியில்  தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு சங்கத்தை வலுப்படுத்தியவர். 2000 ஆம் ஆண்டில்  மின்வாரிய பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு தேயிலைத்தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக தீவிரமாக பணியாற்றி வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வால்பாறை பகுதியில்  வளர்ப்பதில் தோழர் கே. ராமசாமி பெரும் பங்காற்றினார்.

அதன்பின் மதுரையில் தனது மகனும் மகளும் வசிப்பதால் அவர்களோடு வசித்து வந்தார் .அவரது மறைவு என்பது பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது மறைவிற்கு சிஐடியு அகிலஇந்திய துணைத் தலைவர் தோழர் ஏ.கே. பத்மநாபன், மாநிலத் தலைவர்அ.சவுந்தரராசன் , பொதுச் செயலாளர் ஜி சுகுமாறன், மத்திய அமைப் பின்  தலைவர் தீ. ஜெய்சங்கர், பொருளாளர் எம், வெங்கடேசன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே சி கருணாகரன், நீலகிரி வாசு , மத்திய அமைப்பின் முன்னாள் தலைவர்கள் எஸ்.பஞ்சரத்ணம் ,கே.விஜயன்.எஸ்.எஸ்.சுப்ரமணியன்  ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

;