tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 6,993 பேருக்கு கொரோனா...  ஒரே நாளில் 5,723 பேர் குணமடைந்தனர்...   

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து தாண்டி பயணித்து வரும் நிலையில், இன்று (திங்கள்) புதிய உச்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,20,716 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 77 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் இன்று ஒரே நாளில் 5,723 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,249 ஆக உயர்ந்துள்ளது. 

;