tamilnadu

img

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்த நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு இன்று  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக காவல்கட்டுப்பட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். . இந்த மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.  இதைத்தொடர்ந்து சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
 

;