tamilnadu

img

குறவன்-குறத்தி ஆட்டத்தை தடை செய்க... காவல்துறை இயக்குனரிடம் முறையீடு

சென்னை:
குறவன் இன மக்களை இழிவுபடுத்தி ஆடப்படும் குறவன்-குறத்தி ஆட்டத்தை தடை செய்வதுடன் யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்ட அந்த காட்சிகளை நீக்குவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை இயக்குனரிடம் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் வலியுறுத்தப் பட்டது.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் குறவன்-குறத்தி ஆட்டம் என்று விளம்பரப்படுத்தி கீழ்த்தரமான வார்த்தைகளை பேசி ஆபாசமான ஆட்டம் நடைபெற்று வருகிறது.இந்த ஆட்டத்தை ஒரு சில நடன ஏற்பாட்டாளர்கள் இந்த இனத்தின் பெயரை இணைத்து பெயர் பலகைகளிலும் நோட்டீஸ் களிலும் ஆபாசமாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, மலைபடுகடாம், குற்றாலக் குறவஞ்சி, மீனாட்சியம்மை குறம், குறிஞ்சிப்பாட்டு, பெரிய புராணம், திருப்புகழ் திருமந்திரம் போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது குறவன் குறத்தி பாடல்கள்.தொல்காப்பியர், கபிலர், திரிகூட ராசப்ப கவிஞர், குமரகுருபரர், திருநாவுக்கரசர், திருமூலர், சேக்கிழார், அருணகிரிநாதர், பாரதியார், கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் தமிழ் அறிஞர்களாலும் மானுடவியல் வல்லுனர்களாலும் குறிஞ்சி நில மக்களான குறவன் இனத்தின் சங்க காலப் பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி குறமகள் குறியெயினி குறவர் இன மன்னன் ஏறைக் கோன் வில்லி, அரசு குறத்தியரை யார்,  கண்ணகிக்கு கோவில் எழுப்ப காரணமானவர்கள் குறவர்கள்.

தமிழ் கடவுளாக வணங்கப்படும் முருகன்- வள்ளி கடவுளுக்கு கண் கொடுத்த கண்ணப்பனார். சித்தர்களில் புரட்சிக் கருத்துக்கள் சொல்லி பாடிய சிவவாக்கியார் இதுபோல் ஏராளமான வரலாற்று புருஷர்கள் தோன்றிய குறவர் இனத்தின் மாண்புகளை குலைக்கின்ற வகையில் குறவன்-குறத்தி என்றாலே இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என பொதுமக்கள் இடையே எடுத்துக்காட்டும் விதமாக பல பேர் முன்னிலையில் ஆபாசமாக இந்த ஆட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
எந்த குறவன் இன மக்களாலும் ஆடப்படாத இந்த ஆட்டத்தை மாற்று சமூகத்தினர் எங்கள் இனத்தை கொச்சைப்படுத்தி ஆணும் பெண்ணும் பல பேர் முன்னிலையில் ஆபாசமாக பேசி ஆடி பணம் சம்பாதித்து வருகின்றனர். மேலும் இந்த குறவன் குறத்தி ஆட்டம் என விளம்பரப்படுத்தி ஏராளமான யூ ட்யூப் டிவி சேனல் களில் பதிவேற்றம் செய்து பல்லாயிரம் பேரை பார்க்க செய்து பணம் சம்பாதித்து பிழைத்து வருகின்றனர். அவமானகரமான இந்த ஆட்டத்தால் தமிழகத்தில் வாழும் குறவர் இன மக்களிடையே ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாகி வருகிறது.

இந்த ஆட்டத்தை தடை செய்யக்கோரி பல்வேறு குறவர் இன அமைப்புகள் நான் போராட் டங்கள் நடத்தி மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடமும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் போராட்டம் தீவிரம் அடைவதைக் தடுத்திட, தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் குறவன்- குறத்தி ஆட்டத்தை உடனடியாக தடை செய்யவேண்டும். யூ டியூப் சேனலில் குறவன் குறத்தியாட்டம் என்ற பெயரில் உள்ள காட்சிகளை உடனடியாக நீக்கவேண்டும். யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்து குறவர் இன மக்களை இழிவுபடுத்தியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். குறவன்-குறத்தி ஆட்டம் என விளம் பரப்படுத்தும் நடன ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்படியான வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு காவல்துறை இயக்குனரிடம் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.இந்த சந்திப்பில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;