tamilnadu

img

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 63 ஆயிரம் பரிசோதனைகள்....

சென்னை:
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் நடத்திய இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், சென்னையிலும் மாநிலத்தின் இதர பகுதிகளிலும் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது.  கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன.  நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிற  மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண் ணிக்கை அதிகரித்துள்ளது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகஸ்டு 5-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசங்கள் வழங் கப்படும்.ஊரடங்கு காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு என்றார்.

;