tamilnadu

img

இணையம் சம்பந்தமான 3 கொள்கைகள்.... முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

சென்னை:
தமிழகத்தில் இணையம் தொடர் பான 3 கொள்கைகளை முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

"தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் செப்டம்பர் 15 முதல் 19-ம் தேதி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் 'கனெக்ட் 2020' மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020, தமிழ்நாடு நம் பிக்கை இணையக் கொள்கை 2020 மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கை 2020 ஆகியவற்றை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட  இக்கொள்கை, மாநிலத்தில் இணையப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும். தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த பல்வேறு இனங்களில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங் களைப் புகுத்தி அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கிடவும், மனித வளத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு உறுதி கொண்டுள்ளது.அதன்படி, அரசின் சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை இணையவழியில் நம்பகத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான முறையில் செயல்படுத்திட, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன் றான பிளாக்செயின் (Block chain) எனப்படும் ‘நம்பிக்கை இணையத்தொழில்நுட்பத்தை தமிழ்நாடு அரசுத் துறைகள் பயன்படுத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020'-ஐ தமிழ்நாடு முதல்வர்  வெளியிட்டார்.

இதன்மூலம், அரசின் மின்னாளுமைக்காக நம்பிக்கை இணையக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகத் தமிழ் நாடு விளங்கிடும்.அதுபோலவே, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம், பல்வேறு வகையிலான தரவுகளை அவற்றின் வகை, செயல்பாடு மற்றும் பரவல் போன்ற வகைகளில் கூராய்ந்து, அதன்மூலம் அவை தொடர்பான எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்து, அதற் கான விரைவான தீர்வுகளையும் பரிந்துரை செய்யவல்லது. தற்சமயம், செயற்கை நுண்ணறிவுப் பயன் பாடுகள் உலக அளவில் மருத்துவ நோயறிதல், மருந்துப் பொருள் கண்டுபிடிப்புகள், சட்ட அமலாக்கம், ராணுவம், விண்வெளி, கல்வி, ஆளுமை, முதியோர் பராமரிப்பு போன்ற பல துறைகளில் மனித வாழ்க்கையோடு இணைந்து இயங்குகின்றது.

இத்தொழில்நுட்பத்தினை தமிழ் நாடு அரசுத் துறைகள் மக்களுக்கான இணையவழிச் சேவைகளை வழங்குவதில் பயன்படுத்திக் கொள் வதற்கான உத்திகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கை 2020'-ஐ தமிழ்நாடு முதல்வர் இன்று வெளியிட்டார். இதன்மூலம் வெளிப்படையான ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

;