tamilnadu

img

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவிகிதம் அதிகரிப்பு - அதிர்ச்சித்தகவல் வெளியீடு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது  என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய குற்ற ஆவணக்காப்பகம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 4155 குற்றங்கள் குறித்த வழக்குகள் பதிவாகி உள்ளது. இது 2017ஐ ஒப்பிடுகையில் 18 சதவிகிதம் அதிகமாகும்.கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் 49 சதவிகிதம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவையாகும்.  இந்திய அளவில்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ள 5 மாநிலங்களில் தமிழகம் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

;