tamilnadu

img

தாதுபஞ்சகால கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை, ஜூலை 6- சிவகங்கை மாவட்டம் இடைய மேலூர் என்ற இடத்தில் தாது பஞ்ச கால கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடியைச் சேர்ந்த புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார். இது குறித்து காளிராசா கூறுகை யில்,``இடையமேலூரில் ஊரை யொட்டி உள்ளது கங்காணி ஊரணி. இது ‘கங்கா ஊரணி’ என வும் அழைக்கப்படுகிறது. ஊர ணிக்கரையில் உள்ள பிள்ளை யார்கோவில் அருகில் தாதுபஞ்ச கால கல்வெட்டு காணப்படுகிறது. கடந்த குடமுழுக்குப் பணி செய்யும்போது புதையுண்டு கிடந்த கல்லில் எழுத்து இருப்ப தைக் கண்டு அக்கல்லை அவ்வி டத்திலேயே நட்டு வைத்துள்ள னர்.  கல்வெட்டு சுமார் இரண்டு அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உடையது. கல்லில் 13 வரிகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இதில் “உ எனத் தொடங்கி 1877- ஆம் ஆண்டு மேற்படி ஊரிலி ருக்கும் பெரி.மு.நா. நாச்சியப்பன் ஆதிமூல கடவுளர் பேருக்கு வெட்டி வைத்திருக்கும் சண்முக நதி தெப்பக் குளத்திலிருந்து தண்ணீர் பெறுகிற கால்வாய் மேலடி சொல்வார்க்கு திருத்திக் கொடுத்தது தாது வருஷம்” என எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டில் சில எழுத்துப்பி ழைகளும் காண முடிகிறது. 10 மற்றும் 11-ஆம் வரிகள் மிகவும் தேய்ந்து தெளிவில்லாமல் உள் ளன. தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுகிற 60 ஆண்டு வட்டத்தில் தாது ஆண்டு என்பது பிரபவ தொடங்கி வரும் ஆண்டு களில் பத்தாவது ஆண்டாகும் 1876 -1877 தாது ஆண்டில் தொடங்கிய பஞ்சம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்து ஆடி யது. தாது பஞ்சத்தை சென்னை மாகாண பஞ்சம் என்றே அழைக் கின்றனர். அந்தப் பஞ்சகாலத்தில் வெள்ளையர் ஆட்சியில் மக்கள் கொத்துக் கொத்தாக உண வின்றி இறந்தனர் என்பர். கல் வெட்டில் சொல்லப்படுகிற நாச்சி யப்பன் என்பவர் இலங்கை கண்டி யையொட்டிய பகுதியில் தொழில் செய்து வந்ததாகவும் அதில் கிடை த்த வருவாயில் தன் சொந்த ஊரில் ஊரணியை அமைத்ததாகவும் அவரது வம்சாவளியினரும் ஊர் மக்களும் தெரிவிக்கின்றனர். தாது பஞ்ச காலத்தில் மழை யின்மையால் விவசாயம் பொய் த்துப் போய் வறுமையுற்று இருந்த ஊர் மக்களுக்கு ஊரணியை வெட்டும் வேலையை வழங்கி வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து இருக்கலாம்.

இக்கல்வெட்டா னது சண்முக நதி தெப்பக்குளத் துக்கு தண்ணீர் பெருக்க கால் வாய் ஊர்ச் சபையிலிருந்தோ, அன்றைய ஆட்சியாளர்களிடம் இருந்தோ திருத்தி வழங்கப்பட்ட செய்தியைத் தெரிவிப்பதாகக் கொள்ளலாம். மேலும் தாதுப் பஞ்ச கால கல்வெட்டு கிடைத்தி ருப்பது இன்றைய ஊரடங்கு சூழ லில் மக்களின் துன்பத்தைப் பிரதி பலிப்பதாக உள்ளது என்றார். சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அடுத்த கீழடியில் தற்போது 6-ம் கட்ட அகழாய்வுப் பணி நடை பெறுகிறது. கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் என்று தொல்லியல் ஆய்வு விரி வடைந்துள்ளது. ஏற்கெனவே ஐந்தாம் கட்ட அகழாய்வு முடி வில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் “தற்போது கிடைத்திருப்பது ஒரு வால் அளவுதான். கீழடியை சுற்றி பல கிலோ மீட்டர் ஆய்வு செய்தால்தான் முழு அக ழாய்வையும் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கேற்றாற்போல் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன.

;