politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவர் கஸ்தூரிரங்கன்:- இந்தி யைத் திணிக்க முயற்சிக்கவில்லை.
ச.சா- சமஸ்கிருதத்த திணிக்கத்தான் இந்த முயற்சியாமே..??
_ _ _
செய்தி :- வேலைவாய்ப்புக்கான புதிய அமைச்சர்கள் குழு நியமனம் 
ச சா - அமைச்சர்களுக்கு வேலை வாய்ப்பு.. இளைஞர்களுக்கு.. ?!?
_ _ _
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ:- தமிழகத்தில்தான் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்.
ச.சா - அதாவது நீங்க சொல்றதக் கேட்டு செய்யுறவங்களச் சொல்றீங்களா..??
_ _ _
உலக வங்கி :- இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும்.
ச.சா- இதத்தான் ஆறு வருஷமா சொல்றீங்க.. நடக்கலையே..??

;