politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- சிறுபான்மையினரைச் சுற்றி நிலவும் வஞ்சனையை நாம் உடைத்தெறிய வேண்டும்.
ச.சா - அதுக்குதான் குற்றவாளி பிரக்யாவ எம்.பி. ஆக்குனாரோ..?!?
*****
செய்தி :- பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை.
ச.சா - இன்னும் எவ்வளவு உயர்த்தலாம்னு பேசிருப்பாங்களோ...?!?
*****
உச்ச நீதிமன்றம் :- நாடு முழுவதும் கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ச .சா - முதல்ல வரைவு திட்டத்த ஒழுங்கா பண்ணச் சொல்லி மத்திய அரசுக்கு உத்தரவு போடணும். .!!
*****
செய்தி :- ஜம்மு - காஷ்மீர் தொகுதிகளை மறு வரையறை செய்ய மத்திய அரசு ஆலோசனை.
ச சா - சாதகமான தொகுதிகளா உருவாக்கணுமே..?!?

;