world

1990க்குப் பிறகு கடுமையான விலைவாசி உயர்வு திணறுகிறது அமெரிக்கா

வாஷிங்டன், நவ.27- அக்டோபர் மாதத்தில் ஏற் பட்டுள்ள விலைவாசி உயர் வைப் பார்க்கையில், 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட விலை உயர்வு அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட் டுள்ள அறிக்கை கூறுகிறது. தனிநபர் நுகர்வு செல வின விலை அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு விலைவாசி உயர்வைக் கணக் கிடுவதும் வழக்கமாக உள் ளது. மற்ற அட்டவணை களைக் காட்டிலும் இதில் கணக்கிடுவதையே அமெ ரிக்காவின் மத்திய வங்கி விரும்புகிறது. அதோடு, இந்த அட்டவணையைத் தொடர்ந்து வங்கி கண்கா ணித்தும் வருகிறது. அக்டோ பர் மாதத்தில் கணக்கிடுகை யில், கடந்த ஆண்டு இதே வேளையில் இருந்ததை விட 5 சதவிகிதம் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ள தாக இந்த அட்டவணை காட்டியது.

இது போன்ற உயர்வு அண்மைக்காலத்தில் நிகழ்ந்ததில்லை என்றும், 1990 ஆம் ஆண்டில்தான் கடைசியாக இத்தகைய உயர்வு இருந்தது என்றும் கூறியுள்ளனர். இது மேலும் உயரவே வாய்ப்புகள் உள் ளன.  அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள இந்த பணவீக்க உயர் வின் அழுத்தம் குறைய கூடுதல் காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அமெரிக்காவின் மத் திய வங்கியின் கணிப்பை யும் இது மீறவிருக்கிறது. பொருட்கள் மீதான கிராக்கி யும் குறையாமல் இருப்ப தால் விலை அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் வல் லுநர்கள்.  தனது வட்டி விகிதங் களை அப்படியே வைத்தி ருக்கவே அமெரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அடுத்த உயர்வு டிசம்பர் 2022இல்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது அந்த வங்கியின் திட்டமாகும். ஆனால் தற்போதுள்ள நில வரப்படி, செப்டம்பர் 2022 இல் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத் துக்கு மத்திய வங்கி ஆளா கும் என்று துவான் குயென் என்ற அமெரிக்க வாழ் பொரு ளாதார வல்லுநர் எச்சரிக்கிறார்.

;