world

img

உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.43 கோடியை தாண்டியது

உலக அளவில்  12,43,00,248 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,35,343 பேர் உயிரிழந்தனர். 10,02,82,210 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், சுமார் 2,12,82,695 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகிலேயே மிக மோசமாக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க முதலில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,05,76,962 கோடியை தாண்டியது. 5 லட்சத்துக்கு அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். 
உலக அளவில் அதிகமாக உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் 2 - வது இடத்தில் உள்ளது. இதுவரை 2,95,685 பேர் உயிரிழந்துள்ளனர்

;