world

img

உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.28 கோடியை தாண்டியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது வரை உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும் , கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில் உலக அளவில்  12,28,98,689 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,13,580 பேர் உயிரிழந்தனர். 9,90,47,812 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், சுமார் 2 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகிலேயே மிக மோசமாக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க முதலில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,04,25,787 கோடியை தாண்டியது. 5 லட்சத்துக்கு அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். 
உலக அளவில் அதிகமாக உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் 2 - வது இடத்தில் உள்ளது. பிரேசிலில் 1,18,77,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,90,525 பேர் உயிரிழந்துள்ளனர். 


 

;