world

img

விரைவில் பேஸ்புக் பெயர் மாற்றம் – பேஸ்புக் நிறுவனம்    

பேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன் – சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்களை தன்வசம் கொண்டுள்ளது. சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறால் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனிடையே பேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  பேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் ரீபிராண்டிங் செய்யப்படும் எனவும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவைகள் அதன் கிளை நிறுவனங்களாக மாறும் என்றும் கூறப்படுகிறது.  

பேஸ்புக்கின் வருடாந்திர மாநாடு வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பேஸ்புக் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை மார்க் ஸக்கர்பர்க் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தி வெர்ஜ் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

;