world

img

பில்கேட்ஸ், மெலிண்டா விவாகரத்து : உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் இடம் யாருக்கு

மைக்ரோசாப்ட் நிறுவனம் பில்கேட்சும் அவரது மனைவி மெலிண்டாவும் விவாகரத்து செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாஷிங்டன் மாநில விதிகளின் படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினால் 90 நாட்களுக்குப் பிறகே அது அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். அதன்படி
வாஷிங்டன் கிங் கவுன்டி நீதிமன்றத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பிரிவதாக முடிவெடுத்த போது இருவரும் செய்து கொண்ட 
ஒப்பந்தத்தின்படி சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

விவாகரத்து நிபந்தனைகளின் படி அந்த சொத்துக்களின் மதிப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விவாகரத்தை அறிவித்த நேரத்தில் பில்கேட்ஸ் தம்பதியிடம் சுமார் 150 பில்யன் டாலர் மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி சொத்துக்கள் பிரிக்கப்படுமெனில் தற்போது உலக பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் இடத்திற்கு 
எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோரில் யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

;