world

img

தேவையற்ற பிரச்சனைகளை கிளப்ப வேண்டாம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி .

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் அரசின் அதிகாரப்பூர நாளில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சிலக் காலமாக மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றப் பிறகு நடக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வடகொரியாவிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வடகொரிய அதிபர்க்கு அடுத்தப்படியாக சக்தி வாய்ந்த நபரான கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்  அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் , அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு ஒரு அறிவுரை, அது எங்கள் நிலத்தில் துப்பாக்கியின் வாசனையைப் பரப்ப போராடுகிறீர்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் என்றால், உங்கள் தூக்கத்தை சீண்டும் வேலைகளை, ஆரம்பத்திலேயே நிறுத்துவது நல்லது என்று கூறியுள்ளர்.

;