world

img

மத கலவரங்களை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவு

வங்கதேசத்தில் மதக்கலவரங்களை தூண்டும் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். 
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து நேற்று பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறையை தூண்டும் வகையில் நடந்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் படி அந்நாட்டு அமைச்சர் அசாதுஸாமான் கானுக்கு பிரதமர் உத்தரவிட்டார். 
அதேசமயம் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை  உறுதி செய்யாமல் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இந்நிலையில் மதக்கலவரத்தை கண்டித்து நாடு தழுவிய அளவில் அமைதி பேரணியை ஆளும் அவாமிலீக் கட்சியினர் நடத்தி உள்ளனர். மேலும் " இந்து சகோதர சகோதரிகள் அச்சப்பட வேண்டாம். இந்த அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவான அரசு. பிரதமர் ஷேக் ஹசீனாவும், அவாமி லீக் கட்சியும் எப்போதும் உங்களை பாதுகாக்கும்" என அக்கட்சியின் பொதுச்செயலாளர் உபைதுல் காதர் தெரிவித்தார். 

;