world

img

காலத்தை வென்றவர்கள் : ரஷ்ய விண்வெளி வீரர் யூரிககாரின் பிறந்தநாள்

ரஷ்ய விண்வெளி வீரர் யூரிககாரின் 1934ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.

உலகிலேயே விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரிககாரின். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.1960ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகியஇருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.

ககாரின் விண்வெளிப் பயணம் செய்த  ஏப்ரல் 12ஆம் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தநாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செய்த சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு
என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது.பூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதரதளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்
ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம்ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால்ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம்ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.

ககாரினைப் போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயணம் செய்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களைக் கொண்ட ஒரு நினைவுப் பையை நிலவின் மேற்பரப்பில் விட்டுச் சென்றுள்ளனர்.1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கலவிண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும்ஜேம்ஸ் இர்வின் மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலைத் தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளன. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.

ககாரினைப் போற்றும் விதமாக அவரதுஉருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), லண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் யூரி ககாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டனில் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளிவீரரான அலெக்ஸ்சி லியோனோவால் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்குப் பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது. இவர் 1968ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் நாள் மறைந்தார்.

;