- ஐரோப்பிய ஒன்றியம் எரிவாயு பயன்படுத்துவதை 15 சதவீதம் குறைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளது. இதனை சில உறுப்பு தேசங்கள் விமர்சித்துள்ளன.
- தமது மக்களை துன்பங்களில் தள்ளினாலும் ரஷ்யாவை சிதைப்பது என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது போலும்!
- தமக்கு ஆயுதங்களை வழங்குவது போலவே இலவச எரிவாயுவையும் தர வேண்டும் என உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது. உக்ரைன் போர் குறித்து நம்பிக்கை இழந்து வரும் அமெரிக்க மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே!
- சர்வதேச வான் வெளி ஒத்துழைப்பிலிருந்து 2024ஆம் ஆண்டு விலகிக்கொள்வது என ரஷ்யா முடிவு செய்துள்ளது.
- உக்ரைன் போரின் இன்னொரு விரும்பத்தகாத விளைவு! ரஷ்யாவின் 30 பில்லியன் டாலர் சொத்துக்களை பல மேற்கத்திய தேசங்களின் வங்கிகள் முடக்கியுள்ளன. இதன் மூலம் கணிசமான வட்டி வருவாய் கிடைத்துள்ளது.
- ரஷ்யாவின் முதலீட்டில் இவர்கள் குளிர் காய்கிறார்கள் போலும்! உக்ரைன் ராணுவத்தின் உற்சாகம் வீழ்ச்சி கண்டு வருகிறது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
- போர் முனையில் கடும் மனித உயிர்கள் இழப்பு உருவாவதால் போரிட விருப்பமற்ற சாதாரண மக்களையும் சிறைக் கைதி களையும் போர் முனைக்கு உக்ரைன் நிர்ப்பந்தப் படுத்தி அனுப்பி வைப்பதாகவும் ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் பயிற்சி அற்ற இவர்கள் விருப்பமில்லாமல் போரிடுகின்றனர் எனவும் இந்த பத்திரிகை கூறியுள்ளது.
- அமெரிக்கா போன்ற யாரோ சிலரின் போர் வன்மத்துக்கு உக்ரைன் மக்கள் பலியாகின்றனர்.
- வரப்போகும் குளிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என தெரியவில்லை என செக் குடி யரசின் துணை பிரதமர் அச்சம் தெரிவித்துள்ளார்.
- ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் போடும் முன்பு அல்லவா இதனையெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்!
- முன்னாள் சி.ஐ.ஏ. இயக்குநர் ரேமண்ட் மெக்காவர்ன்
- ரஷ்யாவுடன் அமெரிக்கா மறைமுக போரில் ஈடு பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் கைப்பாவை யாக உக்ரைன் களத்தில் உள்ளது எனவும் அம்பலப் படுத்தியுள்ளார்.
- அமெரிக்க மக்கள் இதனை உணர்ந் தால் உலக நாடுகள் அனைத்துக்கும் நல்லது!