- ரஷ்யா மிக மெதுவாக முன்னேறுகிறது அல்லது தோற்றுக் கொண்டுள்ளது என கருத்தாக்கம் உருவாக்கும் மேற்கத்திய ஊடகங்கள் மக்களுக்கும் உக்ரைனுக்கும் பொய்யான நம்பிக்கை யை உருவாக்கிவருகின்றனர் என அமெரிக்க ஓய்வுபெற்ற கர்னல் டொக்லாஸ் மெக்ரோவர் என்பவர் கூறியுள்ளார். நேட்டோ படைகள் நேரடியாக களத்திற்கு வாராத வரை ரஷ்யாவின் வெற்றியும் உக்ரைனின் தோல்வியும் தவிர்க்க இயலாத ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
- சவூதி அரேபியாவுக்கும் அரபு அமீரகத்துக்கும் சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூடுதல் எண்ணெய் பெற இயலவில்லை. வெறுங்கையுடன் திரும்பினார். ரஷ்யாவுக்கு எதிராக இந்த தேசங்களை பேசவைக்கும் முயற்சியிலும் தோல்வி. அதே நேரத்தில் அமீரக வெளியுறவு அமைச்சர் ரஷ்யா சென்று புடினை சந்தித்துள்ளார். ஜோ பைடனின் தொலைபேசியைக் கூட எடுக்காத இவர்கள் புடினை சந்தித்தது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- மெக்சிகோ/கவுதமாலா/ஹோண்டுரஸ்/எல்சால்வடார் ஆகிய தேசங்களிலிருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் வரக் கூடாது என அமெரிக்க உதவி ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கடுமை யாக சில மாதங்களுக்கு முன் கூறினார். ஆனால் இப்பொழுது உக்ரைன் அகதிகள் தாராளமாக அமெரிக்காவுக்குள் வரலாம் என கூறுகிறார். கமலா ஹாரிசுக்கு வெள்ளை அகதிகளுக்கும் கறுப்பு அகதிகளுக்கும் வேறுபாடு தெரிகிறது போலும்!
- ரஷ்யாவின் “ஷகாலின்2” எனும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு திட்டத்தில் இணைய ஜப்பான் விருப்பம் தெரி வித்துள்ளது. ரஷ்யா மீது ஒரு புறம் தடை; இன்னொருபுறம் வர்த்தகம். அமெரிக்காவின் நலன் எல்லா தேசங்களுக்குமான நலன் அல்ல. H மரியபோல் நகரிலிருந்து 16.03.2022 அன்று வெளி யேறிய உக்ரைன் மக்கள் 31,367 பேரில் வெறும் 36 பேர் மட்டுமே உக்ரைனின் கீவ் நகருக்கு சென்றனர். 99% பேர் ரஷ்ய எல்லை கள் நோக்கி சென்றனர். அவர்களில் பலர் உக்ரைன் நாஜிக்கள் தங்களை மனித கேடயமாக பயன்படுத்தினர் என குற்றம்சாட்டினர்.
- உக்ரைனின் ஒடெஸ்ஸா என்பது கருங்கடல் ஓரத்தில் இருக்கும் மிக முக்கியமான நகரம். உக்ரைனின் கிழக்கு பகுதியை முற்றிலும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்யா வுக்கு இந்த நகரத்தை கைப்பற்றுவது அதிஅவசியம். இதனை உணர்ந்துள்ள உக்ரைன் மக்கள் நகரம் முழுவதும் தடைகளை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர். ரஷ்ய ராணு வத்துக்கு மிகப்பெரிய சவால்!
- போருக்கான காரணங்கள் பற்றி பேசும் பொழுது ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நடுநிலை தவறி கருத்து தெரிவிக்கிறார் எனவும் உக்ரைன் மற்றும் நேட்டோவின் தவறுகளை மறைக்கிறார் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
- அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் இருப்பு வேக மாக சரிந்து வருகிறது. இன்னும் 32 நாட்களுக்குதான் இருப்பு உள்ளது என கூறுகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்து அதில் மேற்கத்திய நாடுகளும் சிக்கிக்கொண்டன என பலர் கூறுகின்றனர்.
- உக்ரைன் பிரச்சனைக்கு ரஷ்யா மட்டுமல்ல; நேட்டோ வும்தான் காரணம் என தென் ஆப்பிரிக்க பிரதமர் சிரில் ரமபோஸா கூறியிருக்கிறார். நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்ததுதான் போருக்கு அடிப்படை காரணம் எனவும் மேற்கத்திய நாடுகள் நினைத்திருந்தால் போரை தவிர்த்திருக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
- இரு நாட்களுக்கு முன்பு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் டோன்பாஸ் பகுதியில் ஏவுகணை தாக்குத லை உக்ரைன் நடத்தியது. அதில் 26க்கும் அதிகமான மக்கள் உயிரி ழந்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாயின. இந்த புகைப்படங்க ளை வெளியிட்ட “லா ஸ்டாம்பா” எனும் பிரான்ஸ் பிரபல பத்தி ரிக்கை இது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இறந்த உக்ரைன் மக்களின் புகைப்படங்கள் என பொய் கூறியுள்ளது.