world

img

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசி நன்றாக செயல்படும் ... ரஷ்ய தூதர் தகவல்.....

மாஸ்கோ:
ஸ்புட்னிக் தடுப்பூசி உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது என நிபுணர்கள் கூறியுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ஸ்புட்னிக் தடுப்பூசியின் செயல்திறன் உலகம் அறிந்ததாகும். கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, ரஷ்ய மக்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியானது, உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட உள்ளது. எனவே இது இந்திய-ரஷ்ய தடுப்பூசியாகும். ஸ்புட்னிக்  தடுப்பூசி இந்தியாவில், அடுத்த ஒரு ஆண்டிற்குள் 850 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே தவணையில் செலுத்தும் தடுப்பூசியை தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;