world

img

செய்தித்துளிகள்

நவம்பர் 21 அன்று வெனிசுலாவில் நடைபெற்ற மாகாணத் தேர்தல்களை நிராகரிக்கும் சில நாடுகளின் போக்கிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா, “வேண்டுமென்றே சில நாடுகள் பொய்களைக் கூறி நேர்மையாக நடந்த தேர்தலை நிராகரிக்கின்றன. எந்தவிதச் சான்றும் இல்லாததால் அவர்கள் சொல்வது பொய் என்பது அம்பலமாகிறது” என்கிறார். மேற்குக் கரையில் தங்கள் ஆக்கிரமிப்பை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் கட்டிடங்களைத் தகர்த்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனப் பள்ளிக்கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. இஸ்ரேல் ராணுவத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஐந்து பள்ளிக்கூடங்கள் மீது அவர்களின் பார்வை உள்ளது. மக்களை கட்டாயமாகக் குடியிருக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான உத்தியாகவே பள்ளிக்கூடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. ருமேனியாவில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் ராணுவத் தளபதி நிகோலே க்ளுகா புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே நிலையற்ற தன்மை நிலவி வந்தது. தற்போது மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்துள்ளன. இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் 318 வாக்குகள் ஆதரவாகவும், 126 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.

;