world

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் நதேழ்தா குரூப்ஸ்கயா பிறந்தநாள்...

தோழர் நதேழ்தா குரூப்ஸ்கயா ரஷ்யப்புரட்சியாளரும் அரசியல்வாதியும் எழுத்தாளரும் கல்வியாளரும் புரட்சி நாயகன் லெனினின் துணைவியாரும் ஆவார். இவர் 1869 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் நாள் பிறந்தார்.இவர் இளம் வயதிலேயே கல்வித் துறையில் நுழைந்தார். இவர் கல்வி மீதான டால்ஸ்டாயின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட வளர்ச்சி, கவனம் மற்றும்ஆசிரியர்-மாணவர் உறவின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டுள்ளது என்பதை முன்மொழிந்தார்.

குரூப்ஸ்கயாவுக்கு முதலில் லெனினுடன் கலந்துரையாடல் ஏற்பட்டது. பின் லெனினின் ஆளுமை, பேச்சுக்கள் மூலம் ஈர்க்கப் பட்டார். 1896 அக்டோபரில், லெனின் கைது செய்யப்பட்டார் . பல மாதங்களுக்கு பிறகு குரூப்ஸ்கயா கைது செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து சைபீரியாவில் லெனினுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. லெனின் அவரது தாயாருக்கு ஒரு “இரகசியக் குறிப்பு” எழுதினார். அதில் “with him even such a job as translation was a labour of love” என குறிப்பிடப்பட்டிருந்தது. லெனின்,திருமண உறவைவிட மக்களின் உணர்வுக்குமதிப்பு அளித்தார் என்றும் இதை புரட்சியின் உச்சம் என்றும் குரூப்ஸ்கயா கருதினார்.இவர் 1905 ஆம் ஆண்டு மத்தியக் குழுவின்செயலாளராகவும்1903லிருந்து ரஷியன்சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் போல்ஷ்விக் பிரிவின் செயலாளராகவும் இருந்தார். 1917 நவம்பர் புரட்சியின் பிறகு,அவர் வயது வந்தோர் கல்விப்பிரிவுக்கு பொறுப்பானார். 1920 இல் கல்விக்குழுவின்தலைவர் மற்றும் 1929 முதல்1939 வரை அரசாங்க அமைச்சர் பதவி வகித்தார்.

குரூப்ஸ்கயா புரட்சிக்கு முன் பல தொழிலாளர் குழுக் களுக்குக் கல்வி போதித்தார். புரட்சிக்கு பின்காம்சோல் என்று அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தையும் இளம் தன்னார்வத் தொண்டர் படையினையும் கட்டி எழுப்பியவர்.இவர் 1917 முதல் 1936 வரை எழுதிய சில கட்டுரைகள், ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது ‘கம்யூனிச முறையில் இளைஞர்களைப் பயிற்றுவித்து வளர்த்தல்” என்ற நூல். புரட்சிக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியம் குறித்து கற்க விரும்பும் வாசகர் மாவோவின் “ரஷியப் பொருளாதாரம் பற்றிய விமர் சனம்”, ஜார்ஜ் தாம்சனின் ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ நூலின் முதல் சோசலிச அரசு என்ற ஏழாவது இயலில் ‘சோசலிச சமூகத்தில் வர்க்கப் போராட்டம்’ என்னும் பகுதி, போல்ஷ்விசத்தின் ‘புரட்சிக்குப் பிந்தைய சமுதாயம்’ ஆகிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.1939 இல் இவரது மரணத்தைத் தொடர்ந்து லெனின்கிராட் சாக்லேட் தொழிற்சாலை இவரது நினைவாக குரூப்ஸ்கயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெரணமல்லூர் சேகரன் 

;