world

உக்ரைன்- ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ரஷ்யாவிலிருந்து வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக் கும் தடை விதிக்க வேண்டும் என பின்லாந்தும் எஸ்தோனியா வும் கோரியுள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இல்லை.
  2. சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க சில ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை.  காசு- பணம்-துட்டு- இதன் முன்பு தடைகள் முக்கியமல்ல என்பது சில ஐரோப்பிய நாடுகளுக்கு தெரியும். போர் நிலை குறித்து உக்ரைன் சொல்லும் பல தகவல்கள் உண்மை அல்ல எனவும் ரஷ்யாவை ஏமாற்றச் சொல்லப் படுவது எனவும் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் மிகாயில் போடொலியாக் கூறியுள்ளார்.
  3. ரஷ்யா சொன்னால் அது பொய்! உக்ரைன் பொய் சொன்னால் அது போர்த் தந்திரம்! உக்ரைன் வழியாக குழாய் மூலம் செல்லும் ரஷ்ய எண் ணெய்யை உக்ரைன் நிறுத்தியுள்ளது. இதனால் ஹங்கேரி/ செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படும்.  
  4. ரஷ்ய வங்கிகள் மற்றும் ரூபிளுக்கு விதித்த தடை காரணம்! ரஷ்யா வுக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் தடைகள் காரணமாக அந்த நாடுகளே பாதிக்கப்படத் தொடங்கி விட்டன.
  5. ஜெலன்ஸ்கி இட்லர் பாணியை கடைப்பிடிக்கிறார் என முன் னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவ் குற்றம்சாட்டியுள்ளார். இது உண்மையே! எனினும் “மகாரஷ்யா இனம்” எனும் தேசிய வெறியை கிளப்புபவர்களுக்கும் இது பொருந்தும்.  
  6. உலக சமாதானம் நினைவாக 1990இல் பின்லாந்துக்கு சோவி யத் யூனியன் தந்த ஒரு புகழ்பெற்ற சிற்பத்தை பின்லாந்து அகற்ற முடிவு செய்துள்ளது.
  7. உக்ரைன் போர் இதற்கு காரண மாம்! உக்ரைன் போர் உலக சமாதானத்தின் தேவையை கூடுத லாக முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.
  8. ஐரோப்பாவின் மேன்மை குறித்து எல்லையில்லாமல் சிந்திக்கும் பின்லாந்து போன்ற நாடுகளின் நிலைபாடு பரிதாபகரமானது.
  9. ரூபிள் நாணயம் வலுவடைந்துள்ளதால் வெளி நாடுகளிலி ருந்து 31.2லட்சம்  உழைப்பாளிகள் ரஷ்யாவுக்கு கடந்த 3 மாதங்களில் வந்துள்ளனர் என அயல் துறை  தெரிவித்துள் ளது. அமெரிக்காவின் தடைகள் முழு வெற்றி பெறவில்லை என்பதற்கு இது மேலும் ஒரு நிரூபணம்.
;