world

img

2 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு - மெக்சிகோ

மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2  லட்சத்தை தாண்டியது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது : 
இரண்டாம் கட்ட கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக உயர்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 5,787 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,09,459 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 584 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 

;