world

img

ஆங் சாங் சூச்சி புதன்கிழமை விடுவிப்பு ?


மியான்மர் நாட்டின் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் உள்ள ஆங் சாங் சூச்சி புதன்கிழமை விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சியை மியான்மர் ராணுவம் கவிழ்த்தது. 

இதனை தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி,  ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் வைத்தது.
வீட்டுக் காவலில் உள்ள ஆங் சாங் சூச்சி இன்று (திங்கள் கிழமை) விடுவிக்கப்படுவார் என்று சூச்சியின் வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால் தற்போது சூச்சி புதன்கிழமை தான் விடுவிக்கப்படுவர் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளர்.


 

;