world

img

பொய் சொன்ன பிரேசில் அதிபரின் வீடியோவை நீக்கிய யூடியூப்

கொரோனா குறித்து பிரேசில் அதிபர் பொல்சனாரோ தவறான தகவலை பரப்பிய வீடியோவை யூடியூப் வீடியோவை நீக்கி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில் ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தானது கொரோனா பாதிப்பை தடுக்கவல்லது என பிரேசில் அதிபர் பொல்சனாரோ பேசிய வீடியோ வைரலானது. அதுமட்டும் இல்லாமல் முகக்கவசங்களால் கொரோனாவை தடுக்க முடியாது என்று சர்ச்சைக்குரிய வகையில் அறிவியலுக்கு புறம்பான தகவல்களை பேசியிருந்தார். 
இந்நிலையில் பிரேசில் அரசு கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டது குறித்து ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அவரது வீடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கி உள்ளது. 
 

;