world

img

பிரேசிலில் X தளத்திற்கு தற்காலிக தடை

பிரேசில் நாட்டில் X தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு.
பிரேசில் நாட்டில் X நிறுவனம் தணிக்கை உத்தரவுகளைக் காரணம் காட்டி, 3 வாரங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டில் உள்ள தனது அலுவலகத்தை மூடியதுடன் ஊழியர்களை நீக்கியது எனினும், அந்நாட்டில் சேவை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்தில் நியமிக்கவில்லை என்றால், தளம் முடக்கப்படும் என எலான் மஸ்கிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் எலான் மஸ்க் அதைப் புறக்கணித்ததால் x  தளத்திற்குத் தற்காலிக தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.