world

img

திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... அச்சத்தில் பிரான்ஸ் மக்கள்...   

பாரீஸ் 
ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் முதல் வாரத்தில் உச்சத்தில் இருந்தது. அதன் பின் பல்வேறு கட்டுப்பாடுகளால் மே இரண்டாவது வாரம் முதல் தினசரி பாதிப்பில் மாற்றம் ஏற்பட்டு படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் அந்நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் தனது இயல்பு நிலையை தொடங்க ஆர்வமாக இருந்தனர். 

மே 31-ஆம் தேதி நாட்டின் கொரோனா பாதிப்பு 1,211 ஆக இருந்த நிலையில், திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,848 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 129 பேர் பலியாகியுள்ள நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரிட்டன் போல திடீரென கொரோனா பரவல் அதிகரிப்பதால் அந்நாட்டு மக்கள் மூன்றாம் அலை தொடர்பான அச்சத்தில் உறைந்துள்ளனர்.

;