world

img

பிரான்ஸில் ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு 

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 30,303 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,303 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,63,165 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 89,565 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,69,019 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 36,04,581 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

;