world

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

uகாசாவில் போர் நிறுத்தம் தேவை எனும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா, கனடா, பின்லாந்து, பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகள் உட்பட 153 நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல்,ஆஸ்திரியா உட்பட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 23 நாடுகள் நடுநிலை வகித்தன. 

uஇஸ்ரேல் தனது குண்டு வீச்சு காரணமாக சர்வதேச ஆதரவை இழந்து வருகிறது என்றும் இஸ்ரேலில் தற்பொழுது இருக்கும் அரசாங்கம்தான் வரலாற்றிலேயே பிற்போக்குத்தனமான அரசாங்கம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார். கடுமையான விமர்சனம்தான்! ஆனால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை நிறுத்தாமல் இந்த விமர்சனத்தால் என்ன பயன்?

uபாலஸ்தீன போருக்காக உலகம் எங்கும் உள்ள தனியார் ராணுவ அடியாட்களின் உதவியை இஸ்ரேல் நாடியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.