world

img

இந்திய மக்களுக்கு ஆதரவாக இருப்போம்... பாகிஸ்தான், ரஷ்யா அறிவிப்பு.....

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், வெண்டிலேட்டர்  டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ பொருட்களை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டிவிட்டரில்  “இந்த உலகத்திலும், அண்டை நாட்டிலும் கொரோனா வைரஸால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் விரைந்து குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்வோம். இந்த கொரோனா வைரசுக்கு எதிரான ஆபத்தான போரில் ஈடுபட்டுள்ள, இந்தக் கடினமான நேரத்தில் இந்திய மக்களுக்குநாங்கள் ஆதரவாக இருப்போம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். உலக அளவில் சவாலாக இருந்துவரும் கொரோனா வைரசுக்கு எதிராக மனித சமுதாயம் ஒன்றாக இணைந்து போரிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இருக்க வேண்டும்என்று டிவிட்டரில் பாகிஸ்தான் மக்கள் டிரெண்ட் செய்தனர்.

ரஷ்யா வழங்குகிறதுகொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்தியாவில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளன.இந்தியாவுக்கு உதவ தயார் என்றும் ரஷ்யா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான ரெம்டெசிவிர் மருந்துகள்மற்றும் ஆக்சிஜன் இந்தியாவுக்கு இன்னும் 15 நாட்களில் வர உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;