world

img

சீனா உதவியுடன் பாக்வேக் தடுப்பூசி விநியோகத்தை தொடங்கியது பாகிஸ்தான்

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த பாகிஸ்தான் முதல் முறையாக உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி  செய்ய தொடங்கியுள்ளது.

சீனாவின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த முதல் தடுப்பூசியை பாகிஸ்தானின்  அமைச்சர் அசத் உமர்,  மருத்துவர் பைசல் சுல்தான் மற்றும் சீன அதிகாரிகள் இணைந்த செவ்வாயன்று அறிமுகப்படுத்தினர். 
இதனைத் தொடர்ந்து பாக்வேவ் என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசி விநியோகத்தை பாகிஸ்தானில் இன்று  தொடங்கியுள்ளது.  இதுகுறித்து  பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத் துறை ஆலோசகர் டாக்டர் பைசல் சுல்தான் கூறுகையில், அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் தடுப்பூசி தயாரிப்பு பெரிய அளவில் தொடங்க உள்ளதாகவும்,  கொரோனா தொற்றை  எதிர்த்துப் போராடுவதில் சீனா தங்களுக்கு மிகவும்  நெருக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த தடுப்பூசி காண மூலப்பொருட்களை சீனா வழங்கி இருந்தாலும் அதனை மேம்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருப்பது மிகவும் சவாலான பணி என்றும் அவர் தெரிவித்தார்.

;