world

img

பாகிஸ்தான் சாலை விபத்தில் 6 பேர் பலி

பாகிஸ்தானில் லாரி மீது  வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் பகுதியில் 12 பயணிகளை ஏற்றி கொண்டு வேன் சென்றுள்ளது. அப்போது எதிர் திசையில் வந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார

;