world

img

ஐரோப்பிய நாடுகளில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு  தடை

நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு ஆரம்பத்திலேயே ஐரோப்பிய நாடுகளில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மோசமான பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு நெதர்லாந்து அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலர்க்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் தடை விதிக்கப்பட்டது. 
இதன் காரணமாக அயர்லாந்தும் தற்போது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை வித்துள்ளது. ஏற்கனவே, நார்வே, டென்மார்க், ஐஸ்வாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் 
நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை விதித்துள்ளன. இருப்பினும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்றும் மிகக் குறைவான நபர்களுக்கே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசிக்குத் தடை விதிக்க தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.


 

;