world

img

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.95 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை கடந்துள்ளது
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் பெரும்பாலானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

தற்போதைய சூழலில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை பாதிப்பில் இருந்து 16.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய சூழலில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.


 

;