world

img

6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - நியூசிலாந்து

நியூசிலாந்தில் ஒரே வாரத்த்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. 

நியூசிலாந்து கிஸ்போர்ன் நகரில் இருந்து வடகிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இது வாரத்தின் இரண்டாவது முறையாக ஏற்படுகிறது. இந்த நிலநடுக்கம் மிக பெரியதாக உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிப்பு மற்றும் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் வடக்கு கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

;