world

img

ஜெர்மனி : ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜெர்மனியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சல் மெர்சல் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் 28 வரை ஜெர்மனியில் ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், பிறகு தளர்வுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த்து. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

அதிபர் ஏஞ்சல் மெர்சல் அறிவிப்பில் கூறியதாவது :                       
ஜெர்மனியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஸ்டர் விடுமுறைகளில் 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது

;