world

img

உலக அளவில் கொரோனா தொற்று ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு பாதிப்பு

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் மட்டும்  லட்சத்தை தாண்டி பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,54,15,873 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,56,060 ஆக உள்ளது.  2,13,78,277 தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள அமெரிக்காவில் , இதுவரை 3,07,04,292 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 5,58,442 பேர் உயிரிழந்துள்ளனர். 
பிரேசிலில் , 1,22,27,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,01,087 பேர் இறந்துள்ளனர்.
 

;