world

img

காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு - ஐ.நா அதிர்ச்சி தகவல்

காற்று மாசினை குறைக்க  புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா,செப்.23-  காற்றுமாசு காரணமாக உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் பலியாவதாகவும், லட்சக்கணக்கா னவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை இழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்நிலை யில் காற்றில் கலந்துள்ள மாசுபாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு களை குறைக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு காற்று மாசினை குறைப்பதற்கான வழிகாட்டுதலை உலக சுகாதார நிறுவனம் ( WHO) வெளியிட்டுள்ளது. 194 உறுப்பு நாடுகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கும் இந்நிறுவனம், எரிபொருள் பயன்பாட்டால் காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு  ஆகியவற்றின் முந்தைய பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை மேலும் குறைத்திருக்கிறது. காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு ஆகியவற்றை சுவாசிப்ப தால் இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மரணங்களின் விகிதம் அதி கரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

புதிய வழிகாட்டுதலின் கீழ் பி.எம். 2.5 நிலைக்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை ஒரு கன மீட்டருக்கு  10 மைக்ரோ கிராமில் இருந்து 5 மைக்ரோ கிராமாக  குறைத்திருக் கிறது. மேலும் பி.எம். 10-க்கான  பரிந்துரைக்கப்பட்ட வரம்பு, 20 மைக்ரோ கிராமில் இருந்து 15 மைக்ரோ கிராமாக குறைக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்து வருவதால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் காற்றுமாசினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;