world

img

ஜப்பான் விளையாட்டு வீரர்களுக்கு சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்க மாட்டோம்  

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் ஜப்பான் விளையாட்டு வீரர்களுக்கு, சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்க மாட்டோம் என்று ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் தமாயோ மாருக்காவா தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொள்பவர்களுக்குத் கொரோனா தடுப்பூசிகள் வழங்கி சீனா உதவும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்தது.
இதனை தொடர்ந்து ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் தமாயோ மாருக்காவா கூறியதாவது:
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் ஒலிம்பிக் போட்டியின் போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுவாக இருக்கும். 
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஜப்பான் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் ஜப்பான் வீரர்களுக்கு சீனாவின் தடுப்பு மருந்து போட மாட்டோம் என்று ஒலிம்பிக் அமைச்சர் கூறினார்
 

;