world

img

கனமழையால் பயங்கர நிலச்சரிவு - 19 பேர் மாயம், 35,500 பேர் வெளியேற்றம்

ஜப்பான் நாட்டின் மத்திய மாகாணமான ஷிஜூவோகா-வில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, டோக்கியோவில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  அடாமி நகரில் கடந்த 48 நேரத்தில் 313 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது ஜூலை மாதம் பெய்யக்கூடிய சராசரி மழைப்பொழிவை (242.5 மி.மீ) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தொடர் மழையில் காரணமாக அடாமி நகரில் இன்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில்,  ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.  இந்த பேரிடரில் சிக்கி 19 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் 35,500க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

;