world

img

தீவிரமடையும் கொரோனா பரவல்:  ஜப்பானில் மீண்டும் அவசர நிலை !

ஜப்பானில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு இரண்டாம் கட்டமாக அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே பரவிய கொரோனா தொற்றிலிருந்து மக்கள் முழுமையாக விடுபடாத சூழலில் உருமாற்றம் பெற்ற கொரோனா மீண்டும் தீவிரமாக பரவி வருவது உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
ஜப்பான் தலைநகர்  டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள  மாகாணங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கிறது. கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 3791 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2447 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பரவலை மட்டுப்படுத்த ஜப்பான் அரசு  இன்று முதல் பிப்ரவரி 7 வரை  அவசரநிலையை அறிவித்திருக்கிறது. உணவகங்கள் மற்றும் மது விடுதிகள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும். உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை குறைந்த நேரங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். அலுவலகங்கள் 70 சதவிகிதத்திற்கும் குறைவான ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 

;