world

img

உலகை உலுக்கிய ஹிரோஷிமா நினைவு தினம்

வரலாற்றில் குதிரை யானை அம்பு வால் என போரிட்டுக் கொண்டிருந்த மனித குலத்திற்கு போரின் முழு வடிவிலான கோர முகத்தை காட்டியது என்றால் அது முதல் அணுகுண்டு தாக்குதல் எனலாம் ஆம் எந்த அளவிற்கு கோரம் என்றால் அணுகுண்டு வீசப்பட்ட ஒரு சில நொடிகளிலேயே சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரின் உயிரைப்பறித்தது. லட்சக்கணக்கானோர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டும் கண் பார்வை இழந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் கடும் அவதிக்குள்ளாகினர்
ஹிரோஷிமா மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலே இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது எனலாம். 1918ம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த நிலையிலும் உலக நாடுகளுக்கிடையேயான பனிப்போர் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இத்தாலியில் முசோலினியும் ஜெர்மனியில் ஹிட்லரும் தங்களை பாசிசத்தின் முகமாக அடையாளப்படுத்தி வந்த காலகட்டத்தில் அமெரிக்கா தன் ராணுவ பலத்தை அதிகரித்து ஒரு வல்லரசாக உலக நாடுகளை அச்சுறுத்த தேவையான வேலைகளை செய்து கொண்டே இருந்தது. அமெரிக்கா தனது வல்லரசு இலக்கை எட்ட தேர்ந்தெடுத்த பாதைதான் உலகில் அதுவரை நடந்திடாத மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அணுகுண்டு தாக்குதல்.
அமெரிக்கா உலகில் முதல்முறையாக மேன்ஹார்டன் ப்ராஜெக்ட்டை உருவாக்கி ரகசிய அணு ஆய்வில் ஈடுபட்டிருந்தது. இதன் விளைவாக அமெரிக்காவில் தான் உலகில் முதல் முறையாக அணு குண்டு உருவாக்கப்பட்டது. 
இரண்டாம் உலகப்போரில் இத்தாலியும் ஜெர்மனியும் பின்னடைவைச் சந்தித்தது. நேச நாடுகளின் படைகள் முன்னேறத் தொடங்கி இருந்தாலும் ஜப்பான் போரின் முக்கிய சக்தியாக மாறி இருந்தது. இதனால் அமெரிக்காவின் முதல் எதிரியாக ஜப்பான் மாறியது. பசுபிக் கடல் பிராந்தியத்தில் இருந்த பார்ல் துறைமுகத்தில் ஜப்பான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க போர்படைத்தளம் உடைத்தெறியப்பட்டு போர்க்கப்பல்கள் சிதறடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா ஜப்பானை பழிவாங்க லிட்டில் பாய் என்ற அணுகுண்டை வீச திட்டமிட்டது. 1946 ஜூலை 26ம் தேதி தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு  பாஸ்டன் அறிக்கை வழியாக ஜப்பானிற்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா. ஆனால் தொடர்ந்து போரை நடத்தியது ஜப்பான் .
அந்த சுழலில்தான் 1945 ஆகஸ்ட் 6ம் நாள் வழக்கம் போல் ஹிரோஷிமா மக்கள் அன்றாட பணியில் ஈடுபட்டிருந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் லிட்டில் பாய் என்ற அணு குண்டை வீசியது அமெரிக்கா. 
சுமார் 4 லட்சம் மக்கள் வாழ்ந்த ஹிரோஷிமா நகரில் 540 மீட்டர் உயரத்தில் லிட்டில் பாய் அணுகுண்டு வெடித்ததும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்களை குருடாக்கும் ஒரு மாபெரும் நெருப்புக் கோளம் வான்வெளியில் உருவாகி 900 அடி தூரத்திற்கு பரவியது. காற்றின் வெப்பநிலையோ சுமார் 4000 சதவிகிதம் உயர்ந்தது. மணிக்கு 400 கி,மீட்டர் வேகத்தில் தீ பரவியது. 15 வினாடிகளில் 12000 மீட்டர் உயரத்திற்கு ராட்சச கதிர்வீச்சு புகைமண்டலம் எழுந்து நின்றது. 2000 அடிகளுக்கு மேல் தீ கொழுந்து விட்டு எறிந்தது . அன்றைய தேதியில் ஹேரோஷிமாவில் இருந்த சுமார் 75000 கட்டிடங்களில் 70 சதவிகித கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.  குண்டு வெடிப்பினால் உண்டான அதிர்வால் பத்து மைல் தொலைவில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் கூட நொறுங்கின. மேலும் இந்த அதிர்வு 37 மைல் தொலைவுக்கு உணரப்பட்டது. குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து 4.4 மைல் தொலைவில் இருந்த இரும்பு உள்ளிட்ட எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த அதிர்வு பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவை முற்றிலுமாக அழித்து விட்டது. இதனாலுண்டான தீ ஹிரோஷிமாவை 3 நாட்கள் நின்று எரித்து நாசமாக்கியது. குண்டு வீச்சில் பலியானவர்களை விட உயிர் பிழைத்தவர்களின் நிலை கடுமையானதாக இருந்தது. அனைவரும் வாந்தி, தலை சுற்றல், ரத்தப் போக்கு, முடி உதிர்வு, தீக்காயங்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாகினர். குண்டுவீச்சினால் ஜப்பானின் பிற பகுதிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நடந்த சம்பவத்தின் கோரம் உலகத்திற்கு புலனாகவில்லை. குண்டு வெடித்து 16மணி நேரம் கழித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்தே ஜப்பான் தலைமையக அதிகாரிகளுமே குண்டுவீச்சின் தன்மையை உணர்ந்தனர்.  ஆனால் ஜப்பான் தன் இழப்பை முழுவதும் உணருவதற்கு இடம் தராத அமெரிக்கா ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி பகுதியில் குண்டுமனிதன் என்று பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது. 
(தரையில் இருந்த 500 மீட்டர் உயரத்தில் வெடிக்கச்செய்தது, இதில் 18 கி,மீட்டர் உயரத்திற்கு எழுந்தது தீப்பிழம்பு, தீ அணைந்தவுடன் அடர்த்தியான நச்சு புகை மேகங்களாக மாறியது, அன்றைய தினம் மட்டும் நாகசாகியில் 40000பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து வீசப்பட்ட அணுகுண்டுகளால் ஹிரோஷிமாவில் 13 ச.கிலோ மீட்டர் பரப்பும் நாகசாகியில் 6.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் முற்றிலும் நாசமானது.
சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு இடங்களும் காணப்பட்டதாக ஜப்பான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அங்கு அணுகுண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிரியக்க விளைவுகளே இன்றளவும் பெரும்பாலான குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகவே பிறக்க காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
இதையடுத்து அணுகுண்டின் கோரத்தை உலகிற்கு நினைவூட்டும் பொருட்டே ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஹிரோஷிமாவில் உள்ள சமாதான பூங்காவில் நினைவேந்தல் கூட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 
வரலாற்றில் இத்தனை கொடூரத்தை ஜப்பானில் அமெரிக்க முன்னெடுக்க காரணமாக இருந்தவர் யார் என்றால் தெரிந்தால் நமக்கு ஆச்சரியம் ஏற்படலாம் ஆம் அறிவியல் அறிஞர் ஐஸ்டின்தான் அவர் 
ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்க ஆராய்ச்சி நடைபெற்றதை அறிந்த ஐன்ஸ்டீன் அமெரிக்காவும் அணுகுண்டு தயாரிக்க வேண்டும், இல்லையெனில் ஜெர்மனி உலகையே தன் வசப்படுத்திவிடும், பல நாடுகளை உருத்தெரியாமல் அழித்துவிடும் என்று அதிபர் ரூஸ்வெல்ட்டிடம் மனு அளித்தார். அதன் பிறகே அமெரிக்க அணுகுண்டு தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டது. ஆனால் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுக்கு பின் ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்த ஐன்ஸ்டின் மிகவும் கவலை கொண்டார். அவர் உயிரிழக்கும் தறுவாயில் தான் எழுதிய கடிதத்தின் விளைவாகவே அமெரிக்கா அணுகுண்டை தயாரித்தது. நான் பெரிய தவறு இழைத்துவிட்டேன் வருந்தினார். வாழ்நாள் முழுவதும், அறிவியல் மனிதகுல மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படவேண்டும் என்று விரும்பினார். போரை எதிர்த்தார்.
ஒவ்வொரு நாடும் மறைமுகமாக தங்களது அணு ஆயுதங்களை வெளியுலகுக்குத் தெரியாமல் பாதுகாத்து வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவிடமுள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு இந்த உலகத்தை 27 முறை லட்ச லட்சத் துண்டுகளாக வெடிக்கச் செய்து விளையாடலாம். இப்போது நினைத்துப் பாருங்கள்... அனைத்து நாடுகளின் அணு ஆயுதங்களையும் ஒன்றாக இணைத்து வெடிக்கச் செய்தால்... என்னவாகும்?

;