world

img

ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் அசுரன்!

ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் அசுரன் திரையிட தேர்வாகியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுகளை குவித்த திரைப்படம் அசுரன்.
தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிட பலரின் சிறந்த நடிப்பு பலராலும் பேசப்பட்டது. பல விருதுகளும் வாங்கி குவித்தனர்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் வரும் மார்ச் 27,28 ஆம் தேதிகளில் நடக்கும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் படம் திரையிட தேர்வாகியுள்ளது. 
மேலும், சிறந்த தமிழ் படத்திற்கான போட்டியிலும் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;