world

img

ஜப்பானில் பறவைக் காய்ச்சலால் கொல்லப்படும் 3.5 லட்சம் கோழிகள்

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3.5 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சிபா மாகாணத்தில் 10-வது முறை பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பறவைக் காய்ச்சலால் மட்டும் 4.6 மில்லியன் பறவைகள் இறந்துள்ளது.
மேலும் காவா, ஃபுகுயோகா, ஹியோகோ, மியாசாகி, ஹிரோஷிமா, நாரா, ஓய்தா, வகயாமா, ஒகயாமா, ஷிகா, கொச்சி, டோக்குஷிமா, கிஃபு, ககோஷிமா, டோயாமா மற்றும் இபாரக் உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பறவைக் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பானின் சிபா மாகாணத்தில் சுமார் 3,56,000 கோழிகள் கொல்லப்படவுள்ளதாக கியூடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், 9.3 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜப்பான் வேளாண் துறை தெரிவித்துள்ளது.
  

;