world

img

சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 5 கால்பந்து வீரர்கள் பலி 

கிஸ்மாயோ : சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரில் கால்பந்து வீரர்களோடு சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து கால்பந்து வீரர்கள் உயிரிழந்தனர் . மேலும்  , 25 நபர்களுக்கு மேல் படுகாயமடைந்தனர் . இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை எனத் தகவல் .

 அல்-கொய்தா பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களாக அந்நாட்டில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு , அவ்வப்போது அரசுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது  . இந்நிலையில் , சோமாலியா நாட்டில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது . இதனால் அதைத் தடுத்து நிறுத்துவதாக அல்-ஷபாப் அமைப்பு அரசுக்கு மிரட்டல் விடுத்திருந்தது . அதே போன்று நாட்டில் அங்கங்கே மக்களைக் கொன்று குவித்தும் வந்தது .

இந்நிலையில் , நேற்று , கிளப் அணிகளுக்காக விளையாடும் கால்பந்து வீரர்கள் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர் . திடீரென்று , அந்த பேருந்து வெடித்துச் சிதறியது  ,இதில் 5 கால்பந்து வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்  . மேலும் , பேருந்தில் பயணித்த 25 நபர்களுக்கு மேல் படுகாயமடைந்தனர் . இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் , இது அல்-ஷபாப் இயக்கத்தின் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது கூறியுள்ளார். 

;