world

img

காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவது பதற்றத்தை அதிகரிக்கும் : ஐ.நா. சபை.....

ஜெனீவா;
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து சிதைத்துள்ளது. இதற்கு அந்த மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது என்று அந்த மக்கள் கொந்தளிப்புடன் கூறிவரு கின்றனர். இந்நிலையில் காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது கவலைக்குரியது என்றும் இவை பதற்றத்தை அதிகரிக்கும் என்றும்  ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்சேல் பேச்சலட் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஐ.நா.சபை மனித உரிமைகள் கவுன்சிலின் 48-வது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்சேல் பேச்சலட் பேசுகையில், காஷ்மீரில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், ஜம்மு- காஷ்மீரில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்.ஆனால்  இந்தியாவில் சட்டவிரோத செயல்பாடுகள்(தடுப்புச்) சட்டம்பயன்படுத்தப்படும் விதம், ஜம்மு- காஷ்மீரில் அடிக்கடி தகவல்தொடர்புதுண்டிக்கப்படுவது உள்ளிட்டவை கவலைக்குரியது என்று விமர்சித்தார். இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஜம்மு -காஷ்மீரில் பொதுக்கூட்டம் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அதே நேரத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் தங்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்துவதில் இருந்து தடுத்து  வைக்கப் பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீதான அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் சட்டவிரோத செயல்பாடுகள்(தடுப்புச்) சட்டத்தின் தற்போதைய பயன்பாடு கவலைக்குரியது . நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் ஜம்மு காஷ்மீரில் உள்ளது என்று தெரிவித்தார்.

;